ஜம்மு, ஜூலை 20: பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை இரவு துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு இந்திய ராணுவ வீரர்களும் திருப்பிச் சுட்டனர். இரவு 10 மணிக்குத் தொடங்கிய பரஸ்பர துப்பாக்கிச் சூடு நள்ளிரவு 12.30 மணி வரை நீடித்ததாக எல்லைக் காவல் படையினர் (பிஎஸ்எப்) தெரிவித்தனர்.
இந்த மாதத்தில் மட்டும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இத்தகைய அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுவது இது ஏழாவது முறையாகும். சக் பக்ரிவால் பகுதியில் உள்ள எல்லை சோதனைச் சாவடியை நோக்கி பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டனர். துப்பாக்கிகள் மற்றும் சிறிய வெடி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். அப்போது எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் திரும்ப தாக்கினர். இரு தரப்பினரிடையிலான துப்பாக்கிச் சூடு 2.30 மணி நேரம் நீடித்தது.
இந்திய தரப்பில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என ராணுவத்தினர் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை காலையில்
சோதனைச் சாவடியில் இரு நாட்டினரும் கொடி அணி வகுப்பில் ஈடுபட்டபோது, இந்திய அதிகாரிகள் புகார் பதிவு செய்தனர்.
சர்வதேச எல்லையில் இம்மாதத்தில் மட்டும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்துவது இது ஏழாவது முறையாகும். மூன்று வாரங்களில் ஏழு முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு சம்பவங்கள் சக் பக்வாரி எல்லைப் பகுதியில் நடந்துள்ளன. இதில் ஜம்மு பகுதியில் காவல் பணியில் இருந்த பிஎஸ்எப் வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினர் 6 இந்திய சோதனைச் சாவடிகள் மீது சிறிய ரகக் குண்டுகள், துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இத்தகைய தாக்குதல் ஜூலை 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெற்றுள்ளது. சர்வதேச எல்லைக்கோடு அமைந்துள்ள ஆர்.எஸ். புரா, கர்கோலா, போட்லா பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் ஜூலை 9-ம் தேதி தாக்குதல் நடத்தினர்.
இதேபோல ஜூலை 6, 7-ம் தேதிகளில் சக் பக்வாரி எல்லையில் தாக்குதல் நடத்தினர். ஜூலை 6-ம் தேதி பாகிஸ்தான் படையினர் நடத்திய தாக்குதலில் பிஎஸ்எப் வீரர் உயிரிழந்தார். ஒரு கிராமவாசி காயமடைந்தார். கிருஷ்ணகட்டம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=India&artid=275174&SectionID=130&MainSectionID=130&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88
Tuesday, July 20, 2010
எல்லையில் துப்பாக்கிச் சண்டை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment